கர்நாடகாவில் கார் கூரை, கதவில் தொற்றியபடி ஆபத்தான பயணம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: கர்நாடகாவில் காரை சாகசமாக ஓட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக 7 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
தட்சிண கர்நாடகாவில் ஒரு சொகுசு காரில் 7 வாலிபர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் வாகனத்தின் உள்ளே இருந்ததை விட அதன் வெளியே தான் அதிக நேரம் பயணித்து இருக்கின்றனர்.
காரின் கூரையில் உட்கார்ந்து கொண்டும், ஜன்னல்களில் தொற்றிய படியும் சாகசம் செய்து இருக்கின்றனர். வழி எங்கும் அவர்கள் கூக்குரலிட்டபடியே சென்றுள்ளனர். அவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை அந்த காரை பின் தொடர்ந்த சக வாகன ஓட்டி ஒருவர் தமது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய, பின்னர் அந்த வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த வீடியோ காட்சிகளை கண்ட பலரும் அதை பகிர்ந்தனர். ஆபத்தான மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பயணம் என்று கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விவரம் கர்நாடக காவல்துறையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து அந்த வீடியோ காட்சிகளை பார்வையிட்ட போலீசார், காரின் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும்
-
தமிழகத்தைச் சேர்ந்த இந்திய மீனவர்கள்தான் நம் சொந்தங்கள் என உணர வேண்டும்: மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகேள்
-
போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான வயது வரம்பு: உயர்த்த பா.ம.க., வலியுறுத்தல்
-
அவலநிலையில் பள்ளிக்கல்வி: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: கிறிஸ்துவ மதபோதகருக்கு போலீஸ் வலை!
-
சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
-
தமிழின் பெருமையை பிரதமர் மோடி உயர்த்தி பிடிக்கிறார்; சீமான் பேச்சு