சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

நெய்வேலி : நெய்வேலியில் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்கத் தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். பொது செயலாளர் திருஅரசு, பொருளாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
நெய்வேலி நகர செயலாளர் பாலமுருகன் வரவேற்றார். சங்கத்தின் நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், சந்திரன், குமார், முருகன், வேலாயுதம், சாமுவேல், சம்பத், பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
என்.எல்.சி.,யில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டிய ரகசிய ஓட்டெடுப்பை விரைவில் நடத்த வேண்டும்.
ஏற்கனவே அங்கீகாரம் பெற்றிருந்த சங்கங்களின் பதவிக்காலம் காலாவதியாகி விட்டது. எனவே, இனிவரும் காலங்களில் என்.எல்.சி., தொழிலாளர்களின் பிரச்னைகள் குறித்து அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.

மேலும்
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
-
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
நதிகள் இணைப்பு, பாரதமாதா கோவிலுக்காக பாதயாத்திரை மேற்கொண்டவர் குமரி அனந்தன்: அண்ணாமலை இரங்கல்