தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

1

தைபே: தைவானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.



தைவான் நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது உண்டு. 1999ம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2000க்கும் மேற்பட்டோர் பலியானது நினைவிருக்கலாம். 2024ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 13 பேர் பலியாகினர்.


இந்நிலையில் தலைநகரான சீன தைபேயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் போது கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.


வடகிழக்கு கடற்கரையில் இலனுக்கு தென்கிழக்கில் 21 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் மையம் கூறி உள்ளது. நிலநடுக்கத்தின் போது ஏதேனும் உயிரிழப்போ, சேதாரமோ ஏற்பட்டதா என்ற எந்த தகவலும் இல்லை என்றும் அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

Advertisement