மறைந்த காங். மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் தகனம்

சென்னை: மறைந்த காங். மூத்த தலைவர் குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டு, வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் நள்ளிரவு 12.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவர் ஒருமுறை எம்.பி.,யாகவும், நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும் இருந்தவர்.
காங்கிரசில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், 1980ல் காந்தி காமராஜ் என்ற கட்சியை துவங்கினார். பின் அதை காங்கிரசுடன் இணைத்தார். தமிழக அரசு கடந்த ஆண்டு குமரி அனந்தனுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கியது.
சென்னை சாலி கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் குமரி அனந்தன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தமிழிஞர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
உடல் தகனம்
மறைந்த குமரி அனந்தனுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி குமரி அனந்தன் உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் வடபழனி மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
பிரதமர் மோடி இரங்கல்
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சமூகத்திற்கும், தமிழகத்திற்கும் குமரி அனந்தன் ஆற்றிய பணிகள் நினைவு கூரப்படும்.
அவர் தமிழ்மொழியை பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். குமரி அனந்தன் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தொடர்ந்து, இன்று மாலை 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் வடபழனி ஏ.வி.எம்., மின்மயானத்தில் குமரி ஆனந்தனின் உடல் தகனம் செய்யப்பட்டது.













மேலும்
-
மும்பை அணி கலக்கல் * வில் ஜாக்ஸ் அபாரம்
-
உள்துறை அமைச்சராக விரும்பிய சேஷன் : காந்தி பேரனின் புத்தகத்தில் புது தகவல்
-
பிரீமியர் லீக்: 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி
-
ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்கள் * அபிஷேக், நிதிஷ், ஹர்ஷித் ராணா வாய்ப்பு
-
செஸ்: ஹம்பி, திவ்யா அபாரம்
-
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்