விலங்குகளுக்கு 'ஐஸ் கேண்டி, லாலிபாப்' பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் சிறப்பு வசதி

பெங்களூரு : பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், கோடைக்கால வெப்பத்தை தணிக்க விலங்குகளுக்கு பழங்களால் தயாரித்த ஐஸ் கேண்டி, லாலிபாப் வழங்கப்படுகிறது.
கர்நாடகாவில் வெப்பத்தின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பல்வேறு மாநிலங்களில் வெப்ப நிலை 42 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. மக்கள் பரிதவிக்கின்றனர். வீட்டை விட்டு வெளியே வர முடிவதில்லை. இளநீர், குளிர்பானம், மோர், பழ ரசங்கள் குடித்து வெப்பத்தை சமாளிக்கின்றனர்.
மக்கள் மட்டுமல்ல, விலங்குகளும் கூட வெப்பத்தின் தாக்கத்தால் அவதிப்படுகின்றன. இவைகளை குளிர்விக்க பல வழிகளை கையாள்கின்றனர். பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல் தாலுகாவின் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு பழங்களால் தயாரிக்கப்பட்ட ஐஸ் கேண்டி, லாலிபாப், இளநீர், பழங்கள் வழங்கப்படுகிறது.
கோடைக்காலத்தில் விலங்குகள் குளிர்ச்சியான சூழ்நிலையை விரும்புகின்றன. எனவே ஸ்ப்ரிங்ளர் மூலமாக, விலங்குகள் மீது தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. காட்டு எருமை, காண்டா மிருகம் உட்பட சில விலங்குகள் சேற்றில் இருக்க விரும்பும். எனவே சேற்று குளம் அமைத்துள்ளனர். விலங்குகள் சேற்றில் புரண்டு பொழுது போக்குகின்றன.
காய்கறிகள், பழங்கள் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஐஸ் கேண்டி, லாலிபாப்களை விரும்பி சாப்பிடுகின்றன. குடிநீரில் இளநீர் கலந்து தரப்படுகிறது.
இது குறித்து, பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:
சமீப நாட்களாக ஆனேக்கல் தாலுகாவில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் 38 முதல் 40 டிகிரி செல்சியஷ் வெப்பம் பதிவாகிறது. காட்டில் வசிக்கும் விலங்குகளுக்கு வெப்பத்தை சமாளிக்கும் திறன் இருக்கும். ஆனால் மிருகக்காட்சி சாலையில் வசிக்கும் விலங்குகளுக்கு இத்தகைய திறன் இருக்காது.
விலங்குகளை குளிர்ச்சியாக வைத்திருக்க, பல வசதிகளை செய்துள்ளோம். அந்தந்த விலங்குகளுக்கு ஏற்றபடி, ஊட்டச்சத்தான உணவு வழங்கப்படுகிறது. வெயிலில் இருந்து காப்பாற்ற, ஆங்காங்கே ஷெல்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரடிகள் வசிக்கும் பகுதியில், கரடிகள் குளித்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க செயற்கை நீர் வீழ்ச்சி அமைக்கப்பட்டுள்ளது. விலங்குகள், பறவைகளுக்கு தகுந்த வசதிகளை செய்துள்ளோம். ஆங்காங்கே தொட்டி கட்டி, தண்ணீர் நிரப்பப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
-
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
நதிகள் இணைப்பு, பாரதமாதா கோவிலுக்காக பாதயாத்திரை மேற்கொண்டவர் குமரி அனந்தன்: அண்ணாமலை இரங்கல்
-
சிறுமி மாயம் போலீஸ் விசாரண