சிறுமி மாயம் போலீஸ் விசாரண

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாயமான சிறுமி குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கடந்த இரு ஆண்டுகளாக, கள்ளக்குறிச்சி அடுத்த ஏமப்பேரில் தனது குடும்பத்தினருடன் தங்கி, ஊர், ஊராக சென்று ஜோசியம் பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை 8:30 மணியளவில், வீட்டிலிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement