வாசித்தல் நிகழ்ச்சி கடலுார்

நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் துவக்கப்பள்ளியில் வாசித்தல் சவால் நிகழ்ச்சி நடந்தது.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆண்கள் துவக்கப்பள்ளியில் 100 நாட்களில் 100 சதவீத மாணவர்களுக்கான வாசித்தல் சவால் என்ற நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் ஜெயமூர்த்தி, அண்ணாகிராமம் வட்டார கல்வி அலுவலர் சங்கர் முன்னிலையில் மாணவர்கள் தமிழ், ஆங்கில பாடங்களை வாசித்து காண்பித்தனர்.ஸ்மார்ட் 'டிவி' மூலம் மாணவர்கள் கணிதம் போட்டு காண்பித்தனர். தலைமையாசிரியை வனஜா,பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுமித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement