குறைதீர்வு முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த மின் நுகர்வோர் குறைதீர்வு முகாமில், 139 மனுக்கள் பெறப்பட்டன.

விருத்தாசலம் பூதாமூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர்வு சிறப்பு முகாம் நடந்தது. செயற்பொறியாளர் சுகன்யா தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் நாராயணசாமி, பாரதி, புவனேஸ்வரி, இளஞ்செழியன், உதவி கணக்கு அலுவலர் பழனிவேல் உட்பட உதவி பொறியாளர்கள், மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

மின் கட்டணம் மற்றும் இதர கட்டணம், பழுதான மின் மீட்டர் மாற்றம், உடைந்த மின்கம்பம் மாற்றம், குறைந்த மின்னழுத்தம் தொடர்பாக 139 புகார் மனுக்கள் பெறப்பட்டன. அதில், மீட்டர், மின் கட்டணம் தொடர்பான 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது களஆய்வு செய்து, துரிதமாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement