தேக்கமடைந்த வீடுகள் விற்பனை

சட்டசபையில், அமைச்சர் முத்துசாமி வெளியிட்ட மேலும் சில அறிவிப்புகள்:

l வீட்டுவசதி வாரியம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம் திரூர், காக்களூர்; சேலம் மாவட்டம் இடைப்பாடி ஆகிய இடங்களில், புதிதாக மனை மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்

l வீட்டு வசதி வாரியத்தில், 2024ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்டு விற்பனையாகாமல் உள்ள, குறைந்த வருவாய் பிரிவினருக்கான வீடுகள், தவணை முறையில் விற்கப்படும்

l வீட்டு வசதி வாரியத்தில், 2015 மார்ச் 31க்கு முன், தவணை காலம் முடிந்த குடியிருப்பு திட்டங்களுக்கு, வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை இச்சலுகை வழங்கப்படும்

* வேலுார், செங்கல்பட்டு மண்டலங்களில், இரண்டு கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக, வணிக வளாகத்துடன் அலுவலக கட்டடங்கள்; மூன்று கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் வாயிலாக, சிமென்ட் விற்பனையகம், எரிபொருள் நிரப்பும் மையம் துவக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement