பால் பூத்தில் ஊழியரை திசை திருப்பி ரூ.50,000, நகை திருட்டு

மோகனுார்: தனியார் பால் பூத்தில் வேலை பார்க்கும் பெண் பணியாளரை திசை திருப்பி, 50,000 ரூபாய் ரொக்கம், முக்கால் பவுன் நகையை திருடி சென்ற மர்ம

நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


நாமக்கல் மாவட்டம், மோகனுார் முத்துராஜா தெருவை சேர்ந்-தவர் கோவிந்தம்மாள், 60; இவர், மோகனுாரில் உள்ள ஆரோக்-கியா பால் பூத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு பால் பூத்திற்கு செல்லும்போது, வீட்டில் இருந்து, 50,000 ரூபாய் ரொக்கம், முக்கால் பவுன் நகையை ஒரு பையில் போட்டு எடுத்து வந்துள்ளார். பின், அந்த பையை கல்லா பெட்டி அருகே வைத்துவிட்டு பணியை தொடங்கினார்.

காலை, 6:45 மணிக்கு, மர்ம நபர் ஒருவர் பால் பாக்கெட் வாங்க வந்துள்ளார், அவருக்கு பால் எடுப்பதற்காக, கோவிந்தம்மாள் உள்ளே சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மற்றொரு வாலிபர், கோவிந்தம்மாளை மறைத்தபடி, பின்பக்கமாக கட்-டைப்பையை திறந்து காத்திருந்தார்.
அப்போது, முதலில் வந்த நபர், கோவிந்தம்மாள் பையில் வைத்-திருந்த, 50,000 ரூபாய் ரொக்கம், முக்கால் பவுன் நகையை எடுத்து கட்டைப்பையில் போட்டவுடன் இருவரும் வெளியே-றினர். சிறிது நேரம் கழித்து பணப்பையை பார்த்தபோது காணா-ததை கண்டு, கோவிந்தம்மாள் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து புகார்படி, மோகனுார் போலீசார் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்-தனர். அதில் பதிவாகியுள்ள மர்ம நபர்களின் புகைப்படத்தை கொண்டு தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரப-ரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement