40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை உயிரிழப்பு சண்டையில் இறந்ததாக வனத்துறை தகவல்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, 40 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழந்த நிலையில், இரு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் இறந்திருக்கலாம் என, வனத்துறையினர் தெரிவித்-தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்-கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட மாரண்டஹள்ளி காப்புக்-காடு, மாமரத்துப்பள்ளம் சரக வனத்தில், 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை, நீரோடையில் விழுந்து இறந்து கிடந்தது. யானையின் சடலம் சற்று அழுகிய நிலையில் காணப்பட்டது.


இரவில் ரோந்து சென்ற வனத்துறையினர் பார்த்து, ஓசூர் வனக்-கோட்ட வன உயிரின காப்பாளர் பகான் ஜெகதீஸ் சுதாகர் மற்றும் தலைமையிடத்து உதவி வன பாதுகாவலர் யஸ்வந்த் ஜெகதீஸ் அம்புல்கர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று முன்-தினம் கடமகுட்டை சூழல் மேம்பாட்டு குழு தலைவர் முரு-கேசன் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில், பெட்டமுகி-லாளம் கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் யானையின் சட-லத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது, யானையின் தலையில் காயம் இருப்பது தெரிந்தது. அதன் இரு தந்தங்களும் அப்படியே இருந்ததால், அதற்காக யானையை மர்ம நபர்கள் வேட்டையாடவில்லை என, வனத்
துறையினர் உறுதி செய்தனர். யானையின் தந்தங்கள் அப்புறப்ப-டுத்தப்பட்டு, வனத்துறை அதிகாரிகளால் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டன.
வனத்துறையினர் முதற்கட்ட விசாரணையில், இரு யானைக-ளுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் காயமடைந்து யானை உயிரிழந்திருக்கலாம் என்பது தெரிந்தது. பாறையில் இருந்து தவறி நீரோடையில் விழுந்து உயிரிழந்திருக்கவும் வாய்ப்புள்-ளதால், வனத்துறையினர் தொடர்ந்து விசாரித்து
வருகின்றனர்.

Advertisement