மறுபடியும் 'மணக்குமா' மலர் சந்தை? எதிர்பார்க்கின்றனர் பூ வியாபாரிகள்

கோவை; கோவையில் ரூ.92 லட்சத்தில், 97 தரைக்கடைகளுடன் கட்டப்பட்ட, 'மலர் சந்தை' மூடிக்கிடக்கிறது.
கோவை - மேட்டுப்பாளைம் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்படுகிறது.
மிகவும் குறுகிய இடத்தில் செயல்பட்டதாலும், ஒரே நேரத்தில் அதிகமானோர் கூடியதாலும், கொரோனா தொற்று பரவலுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. அச்சமயத்தில் தற்காலிகமாக பூ மார்க்கெட் மூடப்பட்டது.
மாற்று ஏற்பாடாக, 'அம்மா' உணவகம் அருகே, ரூ.92 லட்சத்தில், 97 தரைக்கடைகள் கட்டப்பட்டன. இவ்வளாகத்துக்கு, 'மலர் சந்தை' என பெயர் சூட்டப்பட்டது. அச்சமயத்தில், பூ வியாபாரிகள் பயன்படுத்தினர். அதன்பின், புதுக்கடைகள் என்பதால், ஏலம் கோருவதற்கான ஏற்பாடு நடந்தது. ஐகோர்ட்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்ததால், வியாபாரிகளுக்கு ஒதுக்காமல் நிறுத்தப்பட்டது.
அதன்பின், 'நமக்கு நாமே' திட்டத்தில், பூ வியாபாரிகள் பங்களிப்புடன், பழைய மார்க்கெட் புதுப்பிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.
இதன்பின், மலர் சந்தை வளாகம் மூடப்பட்டுள்ளது. மீண்டும் பூ மார்க்கெட் செயல்பட வாய்ப்பில்லாத பட்சத்தில், காய்கறி மார்க்கெட் உருவாக்கவோ அல்லது வாரச்சந்தை நடத்துவதற்கோ, அனுமதி அளிக்க வேண்டுமென்கிற, கோரிக்கை எழுந்திருக்கிறது.
மேலும்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு