ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!

சென்னை: பழநி முருகன் கோவிலில் ஏப்.11 முதல் 13ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



அறுபடை வீடுகளில் 23ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஏப்.5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் இந்த விழா நடைபெறும்.


விழாவின் முக்கிய அம்சமாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை கல்யாண வைபவம் ஏப் 11ம் தேதியும், பங்குனி உத்திர திருத்தேரோட்டம் அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ஏப்.14ம் தேதி பங்குனி உத்திர திருவிழா நிறைவடைகிறது.


பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு தினமும் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந் நிலையில், பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழநி கோவிலில் ஏப். 11 முதல் 13ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் வெளியிட்டுள்ளார்.

Advertisement