பஸ்--வேன் மோதல் 4 பேர் காயம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ராஜபாளையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் நோக்கி நேற்று அதிகாலை 1:00 மணிக்கு வந்த அரசு பஸ் எதிர்திசையில் திண்டுக்கல்லில் இருந்து செங்கோட்டை சென்ற லோடு வேன் மில் வளைவு பகுதியில் நேருக்கு நேர் மோதியது . அரசு பஸ் டிரைவர் அழகர்சாமி 50, கண்டக்டர் மாரிமுத்து 48, லோடு வேன் டிரைவர் திண்டுக்கல் கன்னிவாடியை பிரசாத் குமார் 27, கிளீனர் கோட்டை ராஜா 27, ஆகிய 4 பேரும் காயமடைந்தனர்.

தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தீயணைப்பு துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வன்னியம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement