மெப்கோ கல்லுாரி ஆண்டு விழா

சிவகாசி: சிவகாசி மெப்கோ ஸ்லெங்க் பொறியியல் கல்லுாரியில் 41 வது கல்லுாரி ஆண்டு விழா நடந்தது.
கல்லுாரி நிர்வாக குழு தலைவர் ராமமூர்த்தி, தாளாளர் டென்சிங், செயலாளர் சிங்காரவேல், நிர்வாக குழு உறுப்பினர் அய்யன் கோடீஸ்வரன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் அறிவழகன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பங்கேற்ற இந்தியா எலக்ட்ரானிக்ஸ் ,செமி கண்டக்டர் அசோசியேஷன் தலைவர் வீரப்பன் பேசியதாவது, பெரிதாக நினைத்தல், தொலைநோக்குப் பார்வை மாற்றம் தேவைப்படும்போது மாறுவது, மரியாதையோடு இருத்தல், சுற்றுச்சூழல் பேணுதல் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்,என்றார். சாதனை புரிந்த மாணவர்கள், ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. சாதனையாளர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற துறைகள், ஆய்வு கட்டுரைகள் வெளியீடுகள் செய்த ஆசிரியர்கள், ஆராய்ச்சி உயர் நிறுவனங்களிடமிருந்து ஆராய்ச்சி செய்வதற்கு உதவித்தொகையோடு திட்டங்கள் பெற்ற ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
மேலும்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு