புதைவட மின் கம்பி பெட்டியில் தீ விபத்து

அவிநாசி; அவிநாசி வடக்கு ரத வீதியில், குலாலர் மண்டபம் எதிரில் வைக்கப்பட்டுள்ள புதைவட கம்பி மின்மாற்றிப் பெட்டியில் நேற்று காலை திடீரென புகை கிளம்பியது. மக்கள் அளித்த தகவலை தொடர்ந்து, உடனே, மின் வினியோகத்தை நிறுத்தி, விரைந்து சென்ற மின் வாரிய உதவி பொறியாளர், ஊழியர்கள் மின்மாற்றி பெட்டியில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மின் வினியோகம் வழங்கப்பட்டது. ஒரு முனை மின்சாரத்தில் உயர் அழுத்த மின் சப்ளை ஏற்பட்டதால், தீ விபத்து ஏற்பட்டதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

Advertisement