கட்டாய வினா; 'கசந்தது' கணிதத்தேர்வு

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணிதத் தேர்வை, 29,449 பேர் தேர்வெழுதினர். தனித்தேர்வர்களில், 749 பேர் தேர்வெழுதினர். 436 பேர் தேர்வெழுத வரவில்லை.
தேர்வெழுதியோர் பகிர்ந்தவை:
தர்ஷினி: படித்திருந்த அனைத்து கேள்விகளும் இடம் பெற்றிருந்தன. ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் கணக்கு பகுதி ஏற்கனவே முந்தைய வினாத்தாளில் இடம் பெற்றது; ஆசிரியர் முக்கியம் என குறிப்பிட்டு சொன்னவை தான். ஐந்து மதிப்பெண் கட்டாய வினாவுக்கு விடை எழுதியுள்ளேன்; நிச்சயம் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.
தக் ஷிகா திவாரி: ஒரு மதிப்பெண்ணில் இரண்டு வினாக்கள் பாடங்களுக்குள் இருந்து வந்திருந்தாலும் விடையளிக்க முடிந்தது. கணிதம் எளிமையாகத்தான் இருந்தது. ஐந்து மதிப்பெண் கட்டாய வினா இதுவரை கேட்கப்படாத கேள்வி; அதிகம் யோசிக்க வைத்தது. விடையளிக்க முடிந்தது.
ஆரோக்கிய அமல்ராஜ்: இரண்டு மதிப்பெண்ணில், இரண்டு கேள்விகள் யோசித்து விடை எழுதும் வகையில் இருந்தது. ஆனால், கட்டாய வினா ஏற்கனவே கேட்கப்பட்டதாக எளிமையாக இருந்தது. ஐந்து மதிப்பெண்ணில் கட்டாய வினா தவிர அனைத்து கேள்விகளுக்கும் முழுமையாக விடைஎழுத முடிந்தது.
தினேஷ்: ஐந்து மதிப்பெண்ணில் கட்டாய வினா மட்டும் கடினமாக இல்லாமல் எளிமையாக இருந்திருந்தால், கட்டாயம் சென்டம் மதிப்பெண் கிடைக்கும். மற்ற வினாக்களுக்கு முழுமையாக விடைஎழுதி உள்ளேன். நிச்சயம், 90க்கும் மேல் மதிப்பெண் பெற முடியும்.
'சென்டம்' குறையும்
திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் முத்துமகேஸ்வரி கூறுகையில், ''ஐந்து மதிப்பெண்ணில் கட்டாய வினா (வினா எண்:42) சற்று தடுமாற செய்திருக்கும். மற்ற வினாக்கள் எளிமையாகத்தான் இருந்தது; கடினமில்லை. கணிதத்தில் தேர்ச்சி சதவீதம் பாதிக்காது; மெல்ல கற்கும் மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்று விடுவர்; ஆனால், கட்டாய வினாவால் சென்டம் குறையும்,'' என்றார்.
மேலும்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு