15 வயது சிறுமிக்கு 'தொல்லை'

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் பொன்ராஜ், 55. இவர், கடந்த ஆண்டு மார்ச்சில் ராணிப்பேட்டை அருகே கிராமத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை, கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்தார்.

சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த, சாரதி, 20, என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அவரும், சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மகளிர் போலீசார் பொன்ராஜ், சாரதியை போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement