ஆண்களுக்கும் விடியல் பயணம்: சட்டசபையில் அமைச்சர் சொன்ன புது தகவல்

14

சென்னை; அரசின் நிதி நிலை சீரான பிறகு ஆண்களுக்கு விடியல் பயணம் என்பது குறித்து கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறி உள்ளார்.



சட்டசபையில் துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. அவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறைரீதியாக அமைச்சர்கள் பதிலளித்தனர்.


அந்த வகையில் திருவாடானை எம்.எல்.ஏ., ராம கருமாணிக்கம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அவர் பேசியதாவது; பஸ்களில் பெண்ளுக்கு விடியல் பயணம் இருப்பது போல் ஆண்களுக்கும் விடியல் பயணம் கிடைக்குமா என்றார்.


அவரின் கேள்விக்கு போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்து பேசியதாவது;


ஆண்களுக்கு பொறுத்த வரை இலவச பயணம் என்ற உங்களின் ஆர்வம் வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இதுவரை ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றவர்கள் பெண்கள். அவர்களுக்கு முன்னேற்றம் தரவேண்டும் என்பதற்காக விடியல் பயணம், உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தந்துள்ளார். எதிர்காலத்தில் அரசின் நிதி நிலைமை சீராகும் பட்சத்தில் இவையும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும்.


இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement