சபாநாயகர் செயல்பாடு ஒருதலைபட்சமானது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு

அ.தி.மு.க., வெளிநடப்பு மக்கள் பிரச்னை குறித்து பேச வாய்ப்பு வழங்கவில்லை எனக் கூறி, சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை: ''துரைமுருகன் சொன்ன பிறகு சபாநாயகர் பேச அனுமதி தருவது ஒரு தலைப்பட்சமானது'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்தார்.
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த, இ.பி.எஸ்., நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: சட்டசபையில் பிரதான எதிர்க்கட்சிகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். பிரதான எதிர்கட்சி பேச அனுமதி கொடுக்காமல் மற்றொரு கட்சி உறுப்பினரை பேச சபாநாயகர் அழைக்கிறார்.
நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சி ஒரு பிரச்னையை எழுப்பினால் அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான் மரபு. துரைமுருகன் சொன்ன பிறகு சபாநாயகர் பேச அனுமதி தருவது ஒரு தலைப் பட்சமானது. சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார். எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்வது தான் முதல்வரின் வேலை. அவருக்கு மக்களின் பிரச்னையை பேச நேரமில்லை.
கருப்பு சட்டை அணிந்து வருவதை வரவேற்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். அவருக்கு மறதி இருப்பது போல் தெரிகிறது. 1999ம் பார்லிமென்ட் தேர்தலில் யாருடன் சேர்ந்து போட்டியிட்டீர்கள். முதலில் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். பிறகு தான் அடுத்தவர் குறித்து குறைகளை சொல்ல வேண்டும். அவையில் எங்களுக்கு பேச அனுமதி கொடுத்து இருந்தால் திராணி இல்லை.
எதிர்க்கட்சியாக இருந்த போது நாட்டின் பிரதமர் வந்த போது கருப்பு பலூன் விட்டீர்கள்.ஆளும்கட்சியாக வந்த பிறகு அதே பிரதமருக்கு வெண் குடை பிடித்தீர்கள். வெண் குடை வேந்தன் முதல்வர். வெள்ளை கொடி பிடித்த வேந்தன். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் எந்த காலத்திலும் வளராது. கால போக்கில் கூட்டணி கட்சிகள் காற்றோடு காற்றாக கரைந்துபோகும். அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் எல்லாம் உஷாராக இருங்கள். இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார். அவரு சபாநாயகர் இல்லை. தாஜா நாயகர். பெரிய சொம்பு வைச்சிருக்கார்.
இது என்ன புதுசா கேள்வி? அவர் தீ மு கா தலமைய்க்கு கட்டு பட்டவர் ஆவார். நன்றியுடன் இருப்பது தானா தலையான கடமை. இப்போர் பதவி சுகம் கார். மற்றும் அமைச்சருக்கு நிகரான செல்வாக்கு மற்றும் சௌகர்யங்கள் அது யாரால்? நன்றி மறப்பது நன்றன்று.
முன்னாள் திமுக முதல்வர் கருணாநிதி அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் உறவை முறித்து பாஜக தீண்டத்தகாத கட்சியல்ல என்று சொல்லி தமிழகத்தை அடகு வைத்து தேவையான மத்திய மந்திரி பதவிகளை வாங்கி அனுபவித்த போது இனித்தது.அதிமுக கூட்டணி வைக்கும் போது எரிகிறது.
அப்பாவு எப்போதுமே அப்படிதான். திமுகவின் விசுவாசி. எதிர்கட்சிகளுக்கு விரோதி. அவர் எப்படிபட்டவர் என்பதை அவருடைய அண்ணனிடமிருந்து தெரிந்து கொள்ளவும்.
இந்து மதவாத இந்தி இனவாத மத்திய கும்பலிடம் அதிமுகவை தமிழகத்தை அடகுவைத்தவர்கள் கருப்பு துணியில் முக்காடு போட்டுக்கொண்டு சட்டசபைக்கு போயிருக்கவேண்டும் . அப்போதுதான் சபாநாயகர் அனுமதித்திருப்பார்
இதைக் கூறுவது ஆட்சிப் பிச்சை போட்ட இனமா?.
nee oru waste land dvdl
மேலும்
வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் கம்பம் நடல் சித்திரை திருவிழா மே 6 ல் துவங்குகிறது
சாராயம் பறிமுதல் : ஒருவர் கைது
போர்ட் அப் டவுன் ரியல் எஸ்டேட்டில் பிளாட் வாங்கினால் பத்திரப்பதிவு இலவசம்
ஆட்டோ டிரைவர்கள் ரோடு மறியல்
சித்திரை திருவிழாவிற்காக வீரபாண்டி ஆற்றங்கரை சீரமைப்பு