பைக் மீது ஜீப் மோதி அ.தி.மு.க., நிர்வாகி பலி

செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம், அத்திப்பட்டை சேர்ந்தவர் தேவன், 45; அ.தி.மு.க., கிளை செயலர். இவர், செங்கம் செல்வதற்காக, 'ஹோண்டா' பைக்கில், நேற்று காலை, 8:00 மணிக்கு, செங்கம் புதுார் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, எதிரே வந்த, சென்னை பெருங்களத்துார், தமிழ்நாடு சூரிய ஒளி மின்சார உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க அலுவலகத்திற்கு சொந்தமான ஜீப்பை, சூரிய ஒளி மின்சார உற்பத்தியாளர்கள் சங்க துணை தலைவர் பார்த்தசாரதி, 45, ஓட்டி வந்தார். அந்த ஜீப், பைக் மீது மோதியதில், தேவன் சம்பவ இடத்திலேயே பலியானார். புதுப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement