சினிமா தயாரிப்பாளர் ராமநாதன் மறைவு

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் ராமநாதன், 72, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.

நடிகர் சத்யராஜின் மேலாளராக பணியாற்றி வந்தவர் எம்.ராமநாதன். இவர், ராஜ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்ற பட நிறுவனத்தை துவக்கி, சத்யராஜ் நடித்த, வாத்தியார் வீட்டுப் பிள்ளை, நடிகன், வள்ளல், திருமதி பழனிசாமி, பிரம்மா, உடன்பிறப்பு, வில்லாதி வில்லன் உட்பட பல படங்களை தயாரித்தார்.

விஜயகாந்த் நாயகனாக நடித்த படத்தையும் தயாரித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்த ராமநாதன், உடல்நலக் குறைவால் நேற்று காலை காலமானார்.

இவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெற உள்ளன. இவருக்கு, பிரமிளா என்ற மனைவியும், காருண்யா, சரண்யா என்ற இரு மகள்களும் உள்ளனர். இருவரும் வெளிநாட்டில் உள்ளனர். ராமநாதன் மறைவுக்கு, திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement