பாலியல் வழக்கு: தொழிலாளிக்கு சிறை

சிவகங்கை : சிவகங்கையில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிபதி உத்தரவிட்டார்.காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்துாரை சேர்ந்தவர் பழனிச்சாமி 56. கொட்டகை தொழிலாளி. இவர் 2022ல் குன்றக்குடி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த உறவினர் வீட்டிற்கு கொட்டகை அமைக்க சென்றபோது 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் சிறுமி 3 மாதம் கர்ப்பம் அடைந்தார். சிறுமியை அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைத்தார். சிறுமியின் பெற்றோர் 2023 ஜன.,23ல் காரைக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். பழனிச்சாமிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
மேலும்
-
சபாநாயகர் செயல்பாடு ஒருதலைபட்சமானது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆண்களுக்கும் விடியல் பயணம்: சட்டசபையில் அமைச்சர் சொன்ன புது தகவல்
-
டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்