'கச்சத்தீவை பிரதமர் மோடி மட்டுமே மீட்க முடியும்' ஜான்பாண்டியன் பேட்டி

1

ராமேஸ்வரம்: தி.மு.க., தாரைவார்த்த கச்சத்தீவை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

நேற்று இரவு 7: 20 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜான்பாண்டியன், கட்சி நிர்வாகிகளுடன் தரிசனம் செய்தார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் பிரதமர் மோடி ஆட்சியின் வரலாற்று சாதனை.

முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேறாது. இது அறிவிப்புடன் காணாமல் போய்விடும். கச்சத்தீவை தி.மு.க., தாரைவார்த்து கொடுத்து விட்டு சட்டசபையில் மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுவது கேலிக் கூத்தாக உள்ளது. பிரதமர் மோடியால் மட்டுமே கச்சதீவை மீட்க முடியும். இதனையும் பிரதமர் மோடி செய்து காட்டுவார் என்றார்.

Advertisement