வகுப்பறையில் புகுந்து மாணவிகள் மீது தாக்குதல்; மாணவன் மீது வழக்கு
நாகர்கோவில் : தனியார் கல்லூரியில் வகுப்பறையில் புகுந்து இரண்டு மாணவிகளை தாக்கிய சக மாணவன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி பிபின்சி 20. பேராசிரியர் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது சக மாணவி ஒருவர் தவறாக வாசித்துள்ளார்.
இதை பிபின்சி சுட்டிக் காட்டினார். இதை அந்த மாணவி அதே கல்லூரியில் பி .ஏ.முதல் ஆண்டு படிக்கும் தனது நண்பர் எட்வின் ஜோசிடம் கூறி அழுதுள்ளார்.
இதையடுத்து வகுப்பறைக்குள் வந்த எட்வின் ஜோஸ் டெஸ்க் மீது ஏறி பிபின்சியின் முகத்தில் மிதித்துள்ளார். தடுக்க வந்த சக மாணவி லீபோனா ரோஸ்லின் என்பவரையும் தாக்கி மிரட்டல் விடுத்தார்.
நித்திரவிளை போலீஸ் ஸ்டேஷனில் பிபின்சி புகார் செய்தார். எட்வின் ஜோஸ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேலும்
-
சபாநாயகர் செயல்பாடு ஒருதலைபட்சமானது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆண்களுக்கும் விடியல் பயணம்: சட்டசபையில் அமைச்சர் சொன்ன புது தகவல்
-
டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்