அதிக நாள் விடுப்பு, சான்றிதழ்களில் சந்தேகம் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது இ.கம்யூ.,புகார்

கிருஷ்ணகிரி: அதிக விடுப்பு, சான்றிதழ்களில் சந்தேகம் இருப்பதாக கூறி நடுநி-லைப்பள்ளி ஆசிரியர் மீது வேப்பனஹள்ளி இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடம் புகார் மனு வழங்கியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம், அலேகுந்-தாணி ஊராட்சி

ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுபவர் பாலகிருஷ்ணன், 50. இவர், கடந்த, 2008ல் கண்பார்வை குறைவு, இரண்டு கைகள் ஊனம் என, 18 வயதிற்-குட்பட்டோருக்கு வழங்கப்படும் சான்றிதழை, 34 வயதில் வாங்-கியுள்ளார். அவர் பணியில் சேரும்போது அதாவது, 2010ல், ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவ சான்றிதழ் வழங்கி-யுள்ளார். இதை கவனிக்க தவறி உள்ளனர். அதேபோல கடந்த, 2009ல், பி.எட்., பி.ஏ., இரண்டு படிப்புகளையும் முடித்ததா-கவும் தெரிவித்துள்ளார். அந்த ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும்.

அவரது, 15 ஆண்டு ஆசிரியர் பணிக்காலத்தில், கொரோனா காலத்தை தவிர்த்து, 13 ஆண்டுகளில், 1,700 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துள்ளார். விடுப்பு நாட்கள் இல்லாமல், 21 மாதங்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். முறைகே-டாக ஊக்க ஊதியம் பெற்று

வருகிறார். இது குறித்து யாராவது கேட்டால் அவர்களை மிரட்டு-கிறார். இது குறித்து வேப்பனஹள்ளி போலீசிலும் புகார் அளிக்-கப்பட்டுள்ளது.

எனவே பாலகிருஷ்ணனின் கல்விசான்றிதழ்கள், மாற்றுத்திறனா-ளிகள் சான்று, பணி பதிவேடு உள்ளிட்டவற்றை விசாரணை அதி-காரிகள் முன்னிலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், முறைகேடுகள் கண்டறியும் பட்சத்தில் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து ஆசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “கடந்த, 2020ல், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில், 100க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்களை விதிமுறைகளை மீறி நியமித்ததாக, நான் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அதேபோல ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை ஆசிரியர்களாக நியமித்து, 58 லட்சம் ரூபாய், தலைமை ஆசிரியர் வங்கி கணக்கு மூலம் எடுத்து ஊதியம் வழங்கப்பட்டது.
இது போன்றவற்றையும், வட்டார கல்வி அலுவலர்கள் மீதும் புகாரளித்தேன். இதனால் என் மீது பலரும் காழ்ப்புணர்ச்சியில் உள்ளனர். அதன் விளைவாகவே ஆசிரியர்களின் தூண்டுதல் பேரில் என் மீது புகாரளித்துள்ளனர். அவற்றிற்கு சட்ட விதி
முறைகள் படி சந்தித்து பதிலளிப்பேன்,” என்றார்.

Advertisement