3 குழந்தைகள் உட்பட 5 பேர் மாயம்
ஓசூர்: ஓசூர், ராயக்கோட்டை அருகே வெவ்வேறு சம்பவத்தில், 3 குழந்தைகள் உட்பட, 5 பேர் மாயமாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உடையாண்-டஹள்ளியை சேர்ந்தவர் குமார்,45; டிரைவர். இவரது மனைவி தீபிகா, 29. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக உள்ளார். இவர்களுக்கு, 11 மற்றும் 5 வயதில் இரு மகள்கள், 8 வயதின் ஒரு மகன் உள்ளனர். மூத்த மகள் அரசு நடுநிலைப்பள்-ளியில், 6 ம் வகுப்பும், மகன் மூன்றாம் வகுப்பும் படிக்கின்றனர்.
தீபிகா தொடர்ந்து இரவு பணிக்கு சென்றதால், கணவர் குமார் ஆட்சேபனை தெரிவித்ததுடன், வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் விரக்தியடைந்த தீபிகா, மூன்று குழந்தைகளுடன் கடந்த, 5 காலை, 9:10 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் இருக்குமிடம் தெரியாததால், கணவர் குமார் கொடுத்த புகார்படி, ராயக்கோட்டை போலீசார் தேடி வரு-கின்றனர்.ஓசூர் தாலுகாவை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; தனியார் ஐ.டி.ஐ.,யில் இரண்டாமாண்டு படிக்கிறார்; கடந்த, 3 மாலை, 4:00 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி மாயமானார். அவரது தந்தை ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், நந்திமங்கலத்தை சேர்ந்த நந்து, 20, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசா-ரித்து வருகின்றனர்.
மேலும்
-
ஆண்களுக்கும் விடியல் பயணம்: சட்டசபையில் அமைச்சர் சொன்ன புது தகவல்
-
டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி