பஞ்சாபில் நள்ளிரவில் நிகழ்ந்த பயங்கரம்: பா.ஜ.,தலைவர் வீட்டின் வெளியே வெடிச்சத்தம்

ஜலந்தர்: பஞ்சாபில் பா.ஜ., தலைவர் வீட்டின் வெளியே குண்டு வெடித்தது போன்ற சத்தம் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பா.ஜ., தலைவர் மனோ ரஞ்சன் காலியா வீடு உள்ளது. அவரின் வீட்டுக்கு வெளியே நள்ளிரவு 1.00 மணியளவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. ஆரம்பத்தில் இதை எதோ இடி சத்தம் என்று எண்ணி தவறாக நினைத்துள்ளார். அதன் பின்னர் சந்தேகம் கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தடயவியல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட அவர்களும் நேரில் சென்று நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
இதுகுறித்து ஜலந்தர் போலீஸ் கமிஷனர் தன்பிரீத் கவுர் கூறியதாவது; நள்ளிரவு 1 மணிக்கு இங்கு குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ பகுதியில் நாங்கள் விசாரணை நடத்தினோம்.
தடயவியல் துறையினரும் தடயங்களை சேகரித்துள்னர். சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் பார்வையிட்டு வருகிறோம். கையெறி குண்டு தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் ஒரு சம்பவமா என விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சம்பவம் குறித்து மனோரஞ்சன் காலியா கூறுகையில், நள்ளிரவு 1 மணி அளவில் தூங்கி கொண்டிருந்தேன். அப்போது குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதை இடி சத்தம் என்று நினைத்தேன். பின்னர் குண்டுவெடிப்பாக இருக்கும் என்று சந்தேகப்பட்டு போலீசுக்கு தகவல் தெரிவித்தேன் என்றார்.

மேலும்
-
டாஸ்மாக் வழக்கை உச்சநீதிமன்றத்தில் திரும்ப பெற்றது தமிழக அரசு!
-
துபாய் இளவரசருக்கு டில்லியில் சிவப்பு கம்பள வரவேற்பு
-
டிரம்ப், புடின் ரெண்டு பேரும் எனக்கு ரொம்ப நெருக்கம்: சீமான் கலகலப்பு
-
மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி
-
துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்புங்க: அரசுக்கு சொல்கிறார் ராமதாஸ்
-
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; ஏப்ரல் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு