வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; ஏப்ரல் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: ''தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது'' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து வலு குறையக்கூடும்.
தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பான அளவை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
08 ஏப்,2025 - 15:10 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement