கட்டுமான பொருட்களில் கவனம் வேண்டும்: தரமான வீடும் முக்கியம்; ஆயுளும் முக்கியம்!

சிமென்ட், செங்கல், கம்பிகள் என நடைமுறை கட்டுமானங்கள் நடந்துவருகின்றன. இவை கட்டுமான பணிகளை சுலபமாக்குவதுடன், தரமாகவும் அமைகின்றன. அதேசமயம், இந்த வகையான கட்டுமான பொருட்கள், அதிகப்படியான கரியமில வாயுக்களை வெளியிடுகின்றன.
இதனால் இயற்கை சூழல் மாறுபட்டு, பல இயற்கை மாற்றங்கள் நிகழ்கிறது. அடுத்த தலைமுறையினருக்கு ஆரோக்கியமான இயற்கை வளங்களை அளிப்பது நமது கடமையாகும்.அந்த வகையில் தற்சார்பு கட்டுமானங்கள், இயற்கையில் கிடைக்கக்கூடிய பொருட்கள் மற்றும் காலநிலை சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.
முன்பு, சிமென்ட்டுக்கு பதிலாக சுண்ணாம்பு கலவை பயன்படுத்தப்பட்டது. இரும்புக்கு பதிலாக மரங்களே அனைத்து தேவைக்கும் பயன்படுத்தப்பட்டது. இப்படி இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு, கட்டுமானம் எழுப்புவது இயற்கைக்கு பாதுகாப்பாகவே அமைந்தது.
இந்த வகையான கட்டுமானத்தால், கட்டட பொருட்களில் இருந்து, கரியமில வாயுக்கள் வெளியிடுவது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
தற்சார்பு கட்டடங்கள், நடைமுறை கட்டுமானங்களை காட்டிலும், கூடுதல் செலவைக் கொண்டுள்ளன. அதாவது, கட்டுமான பொருட்கள், 30 சதவீதம் மற்றும் கட்டுமான ஆட்களின் கூலி, 70 சதவீதம் கூடுதலாக இருந்தாலும், வெளிப்புற ஆற்றலை பயன்படுத்துவது, முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. செங்கல் இல்லாமல், வெறும் மண்ணை மட்டுமே கொண்டு, சுவர் எழுப்பிய காலங்களும் உண்டு.
அவை வெயில், குளிர் என எந்த காலநிலைக்கும் உகந்ததாக இருந்தது. இன்றைய நவீன கட்டுமானத்தில், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து, இயற்கையை பயன்படுத்தியும், செலவை மிச்சப்படுத்தலாம். நமது பொருளாதாரத்தை விட,ஆரோக்கியமே முக்கியமானது. ஆகவே, அனைவரும் தற்சார்பு கட்டுமானத்தை முன்னெடுப்பது மிக முக்கியம்.
முன்பு, சிமென்ட்டுக்கு பதிலாக சுண்ணாம்பு கலவை பயன்படுத்தப்பட்டது. இரும்புக்கு பதிலாக மரங்களே அனைத்து தேவைக்கும் பயன்படுத்தப்பட்டது. இப்படி இயற்கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு, கட்டுமானம் எழுப்புவது இயற்கைக்கு பாதுகாப்பாகவே அமைந்தது.
செங்கல் இல்லாமல், வெறும் மண்ணை மட்டுமே கொண்டு, சுவர் எழுப்பிய காலங்களும் உண்டு. அவை வெயில், குளிர் என எந்த காலநிலைக்கும் உகந்ததாக இருந்தது. இன்றைய நவீன கட்டுமானத்தில், சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து, இயற்கையை பயன்படுத்தியும், செலவை மிச்சப்படுத்தலாம்.
மேலும்
-
தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
-
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
நதிகள் இணைப்பு, பாரதமாதா கோவிலுக்காக பாதயாத்திரை மேற்கொண்டவர் குமரி அனந்தன்: அண்ணாமலை இரங்கல்