அமலுக்கு வந்தது வக்ப் திருத்த சட்டம்

8

புதுடில்லி: வக்ப் வாரிய திருத்த சட்டம், நேற்று (பிப்.,8) முதல் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த வக்ப் வாரிய சட்டத்தில், மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை செய்தது. இது தொடர்பான சட்டத்திருத்த மசோதா, கடந்த வாரம் பார்லி.,யின் இரு சபைகளில் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், நேற்று முதல் வக்ப் வாரிய திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக, மத்திய அரசு அறிவித்தது.


இதற்கிடையே, வக்ப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக, தி.மு.க., உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் இதுவரை, 15 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றை, வரும் 16ல் உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இதற்கிடையே, தங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில், 'கேவியட்' மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement