ஷ்ரேயஸ் பெயர் பரிந்துரை * ஐ.சி.சி., விருதிற்கு...

துபாய்: ஐ.சி.சி., விருதுக்கு இந்தியாவின் ஷ்ரேயஸ் பரிந்துரைக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. மார்ச் மாதத்திற்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.
சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் பரிந்துரை செய்யப்பட்டார். சமீபத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 5 போட்டியில் இவர், 2 அரைசதம் உட்பட 243 ரன் எடுத்து இருந்தார்.
ஐ.சி.சி., வெளியிட்ட செய்தியில்,' சாம்பியன்ஸ் டிராபியில், மார்ச் மாதம் பங்கேற்ற 3 ஒருநாள் போட்டியில் ஷ்ரேயஸ், (172 ரன், சராசரி 77.47), இந்தியாவுக்காக அதிக ரன் எடுத்த வீரர்களில் முதலிடம் பிடித்தார். கோப்பை வெல்லவும் உதவினார்,' என தெரிவித்துள்ளது.
தவிர, நியூசிலாந்தின் ரச்சின் ரவிந்திரா (4ல் 263 ரன், 3 விக்.,), பாகிஸ்தான் தொடரில் ஜொலித்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டபி (13 விக்.,) பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டன.
மேலும்
-
பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
-
பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
-
பத்ரசாமியின் ஒரு உருக்கமான கோரிக்கை..
-
குட் பேட் அக்லி வில்லன் நடிகர் மீது பிரபல நடிகை புகார்; போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறியதாக குற்றச்சாட்டு
-
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்