பிரியங்காவுடன் வந்து ஆஜரானார் ராபர்ட் வாத்ரா; 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை

12


புதுடில்லி: குருகிராம் நில வழக்கு தொடர்பாக தொழிலதிபர் ராபர்ட் வாத்ரா, தனது மனைவியும், வயநாடு எம்.பி.,யுமான பிரியங்காவுடன் வந்து அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.


கடந்த 2018ல் குருகிராமில் உள்ள 3.5 ஏக்கர் நிலம் வாங்கி விற்றதில் இரு நிறுவனங்கள் இடையே சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்ததாக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு தொகுதி எம்.பி.,யுமான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ரா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை இருமுறை சம்மன் அனுப்பியும், வாத்ரா ஆஜராகாமால் இருந்து வந்தார்.

இந்த சூழலில், நேற்றும் (ஏப்.,16), நேற்று முன்தினமும் (ஏப்.,15) அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ராபர்ட் வாத்ரா ஆஜரானார். 12 மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், 3வது நாளாக ராபர்ட் வாத்ரா அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வந்தார். அவருடன் பிரியங்காவும் வந்திருந்தார். இன்றும் வாத்ராவிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Advertisement