உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: பல்கலை வேந்தராக முதல்வரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியதும், அதன் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு, கவர்னர் ஒப்புதல் வழங்காத நிலையில், அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என, யோசனை வழங்கியது பா.ம.க.,தான். அந்த வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சி அளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி: சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், காழ்ப்புணர்ச்சியுடன் கவர்னர் ரவி நடந்து கொண்டார். அவரது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், தமிழக அரசு எடுத்துள்ள நிலைப்பாடு சரி என்ற வகையில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான மேம்பட்ட அதிகாரத்தை, முதல்வர் ஸ்டாலின் சட்ட ரீதியாக பெற்றிருக்கிறார். இந்திய மாநிலங்களுக்கு, அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ: இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுவதையும், கவர்னர் பொறுப்பை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்தி வருவதையும் உச்ச நீதிமன்றம் தெளிவாக உணர்ந்து, உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. கவர்னர் பதவியில் நீடிக்கும் தார்மீகத் தகுதியை, ரவி இழந்து விட்டார். உடனே, அவர் ராஜ்பவனை விட்டு வெளியேற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம்: அரசியல் சாசனத்திற்கும், தமிழக நலன்களுக்கும் எதிராக, தொடர்ச்சியாக செயல்பட்டு வரும் கவர்னர் ரவியின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தை, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கவர்னர் பொறுப்பிலிருந்து ரவியை, ஜனாதிபதி உடனே நீக்க வேண்டும்.
மேலும்
-
நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
-
இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
-
வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
-
பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 22 பேர் கைது; ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்