'இந்த தீர்ப்பு ஒரு சாட்சி!'

சட்டசபையில் அமைச்சர் துரை முருகன் பேசிய தாவது:

இங்கு எல்லாரும் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்தனர். நானும் பேசாமல் இருந்திருக்கலாம். ஆனால், வரலாற்றில் இதை யார் யார் பாராட்டினர் என வருமே; யார் யார் கல்மனதாக இருந்தனர் என்று வருமே. இந்த காரணத்தால், முதல்வரை பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறேன்.

பொருளாதாரத்தில் இதுவரை எந்த முதல்வரும் பெறாத சாதனையை, நம் முதல்வர் செய்துஉள்ளார்.

இந்த ஆட்சியை, எந்த முறையில் முதல்வர் நடத்துகிறார் என்பதற்கு, இந்த செய்தி உதாரணம். மத்திய அரசை எதிர்த்து நிற்பதில், வெற்றி பெறுவதில், அவர் எப்படி செயல்படுகிறார் என்பதற்கு, இந்த தீர்ப்பு ஒரு சாட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement