ஏரியில் மூழ்கி முதியவர் பலி

மப்பேடு:மப்பேடு அடுத்த கீழச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னபையன், 60. இவர் கடந்த 6ம் தேதி மாலை நரசமங்களம் பெரிய ஏரியில் மீன் பிடிக்க செல்வதாக வீட்டில் கூறி சென்றார்.

வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் மறுநாள் காலை அவரது மகன் செல்வம் மற்றும் உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்தபோது, சின்னபையன் ஏரியின் மதகு பகுதியில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

மப்பேடு போலீசார், இறந்தவர் உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement