கட்டுக்கட்டாக ஆவணங்கள் சிக்கின அமைச்சர் நேரு தம்பியிடம் விசாரணை

சென்னை:அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகங்களில் கட்டுக்கட்டாக ஆவணங்களை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், நேருவின் மகனும், பெரம்பலுார் தொகுதி தி.மு.க., - எம்.பி.,யுமான அருண் ஆகியோர், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கி உள்ளனர்.
இவர்களுக்கு சொந்தமான, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெரம்பலுார் உள்ளிட்ட நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் டி.வி.எச்., கட்டுமான நிறுவன அலுவலகங்களில், நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
நேருவின் சகோதரி உமா மகேஸ்வரி, கோவை சகோதரர் மணிவண்ணன் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக சென்னையில், ஆர்.ஏ.,புரம் பகுதியில் உள்ள ரவிச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கட்டுக்கட்டாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அவற்றை ஆய்வு செய்ததில், நேரு மற்றும் அவரின் சகோதரர்கள், மகன் உள்ளிட்டோர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது.
இதையடுத்து, அமைச்சரின் தம்பி ரவிச்சந்திரனை, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று மாலை, 3:30 மணியளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள, தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, ஐந்து மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பின் அவரை, வீட்டிற்கு அழைத்துச் சென்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து விசாரணை தீவிரமாகி உள்ளது.

மேலும்
-
ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா: உயர்நீதிமன்றம் கேள்வி
-
நக்சலிசத்தை ஒழிக்க பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும்: அமித்ஷா நம்பிக்கை
-
இளம் தலைவர்கள் பட்டியலில் மத்திய அமைச்சர் ராம் மோகன்; இவர் யார் தெரியுமா?
-
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும்: வானிலை மையம் தகவல்
-
வக்ப் வாரியத்தில் புதிய உறுப்பினர் நியமனம் இருக்காது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி
-
பொன்முடி மீது இன்னும் கடும் நடவடிக்கை எடுத்திருக்கலாம்: காங்., எம்.பி., கருத்து