லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமை பொறியாளருக்கு ஜாமின்
காரைக்கால் : காரைக்காலில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உட்பட மூவருக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்கியுள்ளது.
காரைக்காலில் பொதுப்பணித்துறை சார்பில், பல கோடி ரூபாய் மதிப்பிலான கட்டடம், சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த நிறுவனங்கள் டெண்டர் தொகையில் 20 சதவீதத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கமிஷன் தருவதாக சி.பி.ஐ.,க்கு புகார் சென்றது.
அதன்பேரில், சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் கடந்த 22ம் தேதி மகள் திருமண நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கொடுக்க காரைக்காலுக்கு வந்தார்.
அப்போது, தலைமை பொறியாளர் தீனதயாளன், செயற் பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் 8 கோடி மதிப்பில் சாலை பணிகளுக்கு மன்னார்குடியை சேர்ந்த கட்டுமான நிறுவனம் மூலம் டெண்டர் தொகையில் 1 சதவீதமாக ரூ. 8 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.
ஒப்பந்ததார் இளமுருகு பணத்தை கொடுக்கும் போது சி.பி.ஐ., அதிகாரிகள் மூவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.
பின், தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் செயற்பொறியாளர் சிதம்பரநாதன் ஆகியோர் வீடுகள், அலுவலகங்களை சோதனை நடத்தி, கணக்கில் வராத 75 லட்சம் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் மூவரும் கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்டு, காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு விசாரணை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட மூவருக்கும் சென்னை ஐகோர்ட் நேற்று ஜாமின் வழங்கியுள்ளது.
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு