அறிவிப்பின்றி 9 வகுப்பு மாணவர் சேர்க்கை வ .உ.சி., அரசு பள்ளியில் என்ன நடக்கிறது
புதுச்சேரி : புதுச்சேரியின் வரலாற்று சிறப்பு வாய்ந்த நுாற் றாண்டை கடந்த பள்ளியாக மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி. பள்ளி திகழ்ந்து வருகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக மேல்நிலைப் பள்ளியாக திகழும் இந்த பள்ளியில் பல ஆண்டுகளாக ஆறாம் வகுப்பு துவங்கி 12ஆம் வகுப்பு வரை இயங்கி வந்தது.
கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் செலவில் பள்ளி புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆறாம் வகுப்பு துவங்கி பத்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் வெறும் பிளஸ்1, பிளஸ்2 வகுப்பு மட்டுமே நடத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டிற்காக தற்போது இந்த பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர் சேர்க்கை மட்டும் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் 6,7,8 மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. நகரப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த பள்ளியில் மூன்று வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாமல் போனதற்கு சில ஆசிரியர்களே காரணம் என கல்வித்துறை ஊழியர் களே பகிரங்கமாக குற்றம் சாட்டு கின்றனர். 9, 10 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு பாடவேளை மட்டுமே வரும்.
மற்ற நேரங்களில் அந்த ஆசிரியர் ஹாயாக பள்ளியில் ஓய்வில் இருப்பார்.இதுவே 6 முதல் 10 வகுப்பு வரை இருந்தால் 5 பாட வேளை ஒவ்வொரு ஆசிரியருக்கு வரும்.
இதனை தவிர்க்கவே பல ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்காக இது போன்ற கூத்துக்கள் கல்வித்துறையில் நடப்பதாக கல்வித்துறை ஊழியர்களே கூறுகின்றனர்.
இது மட்டுமின்றி ஓராண் டாக பள்ளி முதல்வர் இல்லாமல், பொறுப்பாசிரியர் தலைமையில் பள்ளி இயங்கி வருகிறது. மாணவர்களின் நலன் குறித்து சிறிதும் அக்கறையில்லாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்படாமல் விடப்பட் டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திள்ளது.
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு