சாதனையாளர் விருது வழங்கல்

விழுப்புரம், : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் மாணவர் சாதனையாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

முதல்வர் அகிலா தலைமை தாங்கினார். மாணவியர் பேரவை தலைவர் அஜிமா வரவேற்றார். சென்னை அப்துர் ரகுமான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன புல முதன்மையர் ஹேமலதா, மாணவிகள் கல்வியில் அதிக மதிப்பெண் பெற்று சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற வேண்டும். கல்வி கற்கும் போதே மாணவிகள் தலைமை பண்பையும், கூட்டு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது வாழ்வியலுக்கு உகந்ததாக இருக்கும் என கூறினார். முதுகலை செயலாளர் சுவேதா ஆண்டறிக்கையை வாசித்தார்.

கல்லுாரியின் துறை சார்ந்து நடந்த பல்வேறு செயல்பாடுகளில் பங்கேற்று வென்ற 690 மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. பேரவை துணைத் தலைவி கிஷானிகா நன்றி கூறினார்.

Advertisement