அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்க கூட்டம்

தேனி: அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கத்தின் மாதாந்திர கூட்டம், வீரபாண்டியில் நேற்று நடந்தது. இதில், டி.ஏ., உயர்வு குறித்தும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு, மருத்துவ காப்பீட்டை அரசிடம் வலியுறுத்தி வாங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


மேலும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக பணப்பலனை வழங்குவது சம்பந்தமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் சேலத்தில் நடந்த மாநில மண்டல நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில், தேனி மாவட்டத்திற்கு சிறப்பு விருது வழங்கிய மாநில நிர்வாகிகளுக்கு, நன்றி தெரிவிக்கப்பட்டது.

Advertisement