கவர்னர் பதவி விலகக்கோரி தி.மு.க., ஆர்ப்பாட்டம்

திண்டிவனம் -: கவர்னர் பதவி விலகக் கோரி திண்டிவனத்தில் தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

உச்சநீதிமன்றம் தமிழக கவனருக்கு தனி அதிகாரம் இல்லை, மாநில அரசுக்கு எதிராக செயல்பட முடியாது என நேற்று தீர்ப்பு கூறியது.

அதனைத் தொடர்ந்து, கவர்னர் பதவி விலகக்கோரி திண்டிவனம் காந்தி சிலை அருகே நகர தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகர செயலாளர் கண்ணன் தலைம தாங்கினார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கவர்னரை திரும்ப பெற வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து அவர் பதவி விலக வேண்டும் என கோஷமிட்டனர்.

பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். மாவட்ட பொருளாளர் ரமணன், செயற்குழு உறுப்பினர் சின்ன்சாமி, நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் பிரகாஷ்.

மாவட்ட பிரதிநிதி முருகன், வழக்கறிஞர் அசோகன், ஜெயராஜ், நகர துணை செயலாளர் கவுதமன், அயலக அணி முஸ்தபா, கவுன்சிலர்கள் லதாசாரங்கபாணி, பாஸ்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி



விக்கிரவாண்டி நகர, ஒன்றிய தி.மு.க., சார்பில் பஸ் நிலையத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். பேரூராட்சி சேர்மன் அப்துல் சலாம், துணைச் சேர்மன் பாலாஜி, நியமனக் குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, ஒன்றிய செயலாளர்கள் வேம்பி ரவி, ரவிதுரை, ஜெயபால், நகர செயலாளர் நைனா முகமது, கண்காணிப்பு குழு எத்திராசன், வி.சி., மாவட்ட செயலாளர் திலீபன்.

தி.மு.க., மகளிரணி சித்ரா கோவிந்தன், நகர துணை செயலாளர் பிரசாத், மாணவரணி அமைப்பாளர் யுவராஜ், சைபுல்லா, இளைஞரணி துணை அமைப்பாளர் சிவா, மாவட்ட பிரதிநிதிகள் திலகர், அசோக் குமார் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

விழுப்புரம்



விழுப்புரத்தில் நகர தி.மு.க., சார்பில் காந்தி சிலையருகே நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். நகர செயலாளர் சக்கரை தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், நகர இளைஞரணி மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே தலைமைக் கழக வழக்கறிஞர் சுரேஷ் தலைமையில் துணை அமைப்பாளர் காளிதாஸ், வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், லெனின் விஜய் உட்பட வழக்கறிஞர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

திருவெண்ணெய்நல்லுார்



திருவெண்ணெய்நல்லுார் கடைவீதியில் நகர தி.மு.க., சார்பில் பொதுமக்களுக்கு நகர செயலாளர் கணேசன் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் இனிப்பு வழங்கினர்.

ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவ சக்திவேல், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணராஜ், பேரூராட்சி துணை சேர்மன் ஜோதி, முன்னாள் நகர கழக செயலாளர் செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், கவுன்சிலர் பாக்கியராஜ் கட்சி நிர்வாகிகள் வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement