விக்கிரவாண்டி பைபாஸ் மேம்பால பணி சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்து

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வடக்கு பைபாசில் மேம்பாலம் அமைக்க, சர்வீஸ் சாலையில் வாகன போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
விக்கிரவாண்டி வடக்கு பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், தென்பசார் பகுதியில் மேம்பாலம் அமைக்க கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நகாய் ரூ. 66.78 கோடி நிதி ஒதுக்கீயது. சென்னையைச் சேர்ந்த பி.எஸ்.டி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம மேம்பாலம் கட்ட உள்ளது. தற்போது, மேம்பாலம் பணிக்காக வடக்கு பைபாஸ் பகுதியில் இருபுறமும் சர்வீஸ் சாலைகள் அகலப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்தது.
அதைத் தொடர்ந்து, மேம்பாலம் பணி துவக்கத்திற்காக வாகன போக்குவரத்து சர்வீஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது. போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார் வாகன போக்குவரத்தை சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விட்டனர். ஒரிரு நாட்களில்மேம்பால பணி துவங்கும் என ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு