கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் நாளை பால்காவடி உற்சவம்

புதுச்சேரி : கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை 10ம் தேதி, பால் காவடி மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

புதுச்சேரி, சுப்பையா சாலையில் உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவி லில், பங்குனி உத்திர திருவிழா நாளை 10ம் தேதி நடக்கிறது. இவ்விழாவை யொட்டி, காலை 7:00 மணியளவில், 108 பால்குடம், 50 பால் காவடிகள் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அதனை தொடர்ந்து, சுவாமிக்கு அபிேஷக ஆராதனை நடக்கிறது.

மாலை 5:00 மணியளவில், வள்ளியம்மையை யானை விரட்டும் காட்சியும், அம்பாள் மாலை மாற்றல் நிகழ்ச்சியை அடுத்து, 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement