மயிலம் முருகன் கோவிலில் இன்று திருக்கல்யாண உற்சவம்

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் இன்று 9ம் தேதி இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
பிரசித்தி பெற்ற மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதல், யாகசாலை பூஜை, கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் உற்சவர் அருள்பாலித்தார். நேற்று இரவு 7:00 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் உற்சவர் மலைவலக் காட்சி நடந்தது.
இன்று 9ம் தேதி இரவு 8:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை 10ம் தேதி அதிகாலை 5: 46 மணிக்கு திருத்தேர் விழா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்ட சுவாமிகள் செய்து வருகிறார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
Advertisement
Advertisement