கஞ்சா வழக்கு    தண்டனை

மதுரை : தேனி மாவட்டம் சி.புதுப்பட்டி அன்பழகன்58. இவரது மகன் புகழ்30. இவர்கள் உட்பட சிலரிடம் 2021ல் 52 கிலோ கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.

Advertisement