மாநகராட்சி நீச்சல்குளத்திற்கு 'சீல்'
மதுரை : மதுரையில் ஒப்பந்த காலம் முடிவுற்றதாக கூறி மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு அலுவலர்கள் 'சீல்' வைத்தனர். இதற்கு ஒப்பந்த நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
காந்தி மியூசியம் அருகேயுள்ள இந்த நீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்சி அளிப்பதற்காக தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது. மாநகராட்சி வருவாய் அலுவலர் ராஜாராம் தலைமையில் 'ஒப்பந்த காலம் முடிவடைந்துவிட்டதாக' கூறி நீச்சல் குளத்திற்குள் உள்ள ஆபீசர் அறை, பக்கவாட்டு நுழைவு கேட்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
இதற்கு ஒப்பந்ததாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து, கமிஷனர் சித்ராவிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து துணை கமிஷனர் ஜெய்னுலாவுதீன் விசாரணை நடத்தினார்.
நீச்சல்குள பொறுப்பாளர் ஸ்டாலின் கூறுகையில், தமிழ்நாடு நீச்சல் சங்கம் துணைத் தலைவர் முனியாண்டி இதற்கான ஒப்பந்தம் பெற்றுள்ளார். 2021 முதல் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும். 2029 வரை ஒப்பந்தம் உள்ளது. அதற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி பெறுவோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஒப்பந்தம் முடிந்தது தொடர்பாக மாநகராட்சியில் இன்றும் விசாரணை நடக்கவுள்ளது.
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு