அரவிந்தர் கல்லூரி ஆண்டு விழா

புதுச்சேரி : சேதராப்பட்டு அரவிந்தர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 25ம் ஆண்டு ஆண்டு விழா நடந்தது.

விழாவிற்கு, கல்லூரி தலைவர் நித்தியானந்தன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை பேராசிரியர் வெண்ணிலா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவனங்கள் சங்க மாநில இணை செயலாளர் சுபா சுப்ரமணியன் வாழ்த்திப் பேசினார். கல்லுரி முதல்வர் சுரேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். மேலாண்மை துறை பேராசிரியர் பரமேஸ்வரி விழாவினை தொகுத்து வழங்கினார்.

தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.

வேதியியல் துறை பேராசிரியர் புருஷோத்தமன் நன்றி கூறினார்.

Advertisement