ரேஷன் கடை பணியாளர்கள் விழுப்புரத்தில் வேலைநிறுத்தம்

விழுப்புரம் : தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொது விநியோக திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். மக்களுக்கு வழங்கும் அத்தியவாசிய பொருட்களை ஆண்டுக்கு ஒருமுறை அவர்களிடம் கருத்து கேட்டு அதனடிப்படையில் பொருட்கள் வழங்க வேண்டும்.
பணியில் இருக்கும் போது இறந்த ரேஷன் கடை பணியாளர் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, நேற்று காலை 11:00 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் மாவட்ட தலைவர் கோபிநாத் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொருளாளர் ரஷீத், நிர்வாகிகள் தனசேகரன், ஜெகன், ரங்கசாமி, ராஜா, பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 1052 ரேஷன் கடைகள் உள்ளது. இந்த கடைகளில் 762 விற்பனையாளர்கள் பணிபுரியும் நிலையில், நேற்று 610 பேர் கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்பு சட்டை, பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு