விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம் : விழுப்புரம் போக்குவரத்து காவல் துறை சார்பில், உலக ஆரோக்கிய தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் ஆர்.ஜி.மாடர்ன் செவிலியர் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, ஸ்ரீதரன், விஜயரங்கன் தலைமை தாங்கி, உடல் ஆரோக்கியம் குறித்தும், சாலை பாதுகாப்பு உறுதி மொழி மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement